சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் மீனவர்கள் 8 பேர் விடுதலை

Added : பிப் 12, 2020
Advertisement

ராமேஸ்வரம்: ஜன.,27ல் நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து பாம்பன் மீனவர்கள் 8 பேர் நாட்டுபடகில் மீன்பிடித்த போது, இலங்கை வீரர்கள் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.

நல்லெண்ணம் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க இலங்கை அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினார். அதன்படி நேற்று 8 மீனவர்களை விடுவித்து, படகுஆவணங்களுடன் உரிமையாளர் மார்ச் 18ல் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராக திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலையான மீனவர்கள் கொழும்பு அருகே மெரிகானா டி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில நாட்களில் விமானம் மூலம் சென்னை வந்திறங்குவார்கள் என இந்திய, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான பிரதிநிதி யூ.அருளானந்தம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X