சாலையோர கால்வாய் சேதம் வியாபாரிகளுக்கு சிரமம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையோர கால்வாய் சேதம் வியாபாரிகளுக்கு சிரமம்

Added : பிப் 12, 2020
Share
மஞ்சூர் : மஞ்சூர் மேல் பஜார் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் ஓட்டல், கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற, மேல் பஜார் சாலை ஓரத்தில் பிரதான கழிவுநீர் கால்வாய் பல அடி தூரத்துக்கு அமைக்கப்பட்டது. சமீபத்தில் இச்சாலையில் சென்ற கனரக வாகனம், கால்வாய் தடுப்பை சேதப்படுத்தியது. இதனால், அவ்வப்போது கழிவுநீர் சாலையில்

மஞ்சூர் : மஞ்சூர் மேல் பஜார் பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் மற்றும் ஓட்டல், கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற, மேல் பஜார் சாலை ஓரத்தில் பிரதான கழிவுநீர் கால்வாய் பல அடி தூரத்துக்கு அமைக்கப்பட்டது.

சமீபத்தில் இச்சாலையில் சென்ற கனரக வாகனம், கால்வாய் தடுப்பை சேதப்படுத்தியது. இதனால், அவ்வப்போது கழிவுநீர் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை சீரமைக்கக்கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் விரைவில் ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X