பொது செய்தி

தமிழ்நாடு

பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி: தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி புகழாரம்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி: தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி புகழாரம்

கோவை: ''பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி,'' என்று, கோவை அன்னை மீனாட்சி நர்சிங் கல்லுாரி விழாவில், தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி புகழாரம் சூட்டினார்.

கோவை, சுந்தராபுரம் அன்னை மீனாட்சி நர்சிங் கல்லுாரியில், 27வது விளக்கேற்றும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: ஒரு தாய், தன் குழந்தையை பெற்றது முதல் வளர்ந்து பெரியவன் ஆகும் வரை கவனம் செலுத்தி வளர்க்கிறார். அதேபோல் நோயாளியின் தேவைகளை பொறுமையாக கேட்டு, கவனித்துக் கொள்வதால், தாய்க்கு சமமானவர்கள் நர்ஸ்கள்தான்.

தொட்டில் முதல் இறுதிக்காலம் வரை நமக்கு நர்ஸ் உதவி தேவைப்படுகிறது. நர்ஸ் பணி என்பது ஆசிர்வதிக்கப்பட்ட பணி. இதமான அன்பும், கவனிப்பும்தான் நர்ஸ்களின் பணி.நாள்தோறும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புகளை தரும் புனிதத் தொழில் நர்ஸிங். நோய் குணமாக டாக்டர் மருந்து கொடுக்கிறார். அந்த மருந்து பலனளிக்க வேண்டுமெனில், அது அக்கறையோடு கவனிக்கும், நர்ஸ்களின் கைகளில் தான் இருக்கிறது.

திறமையான நர்ஸ் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைப்பவராகவும், தன் வேலையில் கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். வேலையில் ஏற்படும் மன இறுக்கத்தை சமாளிக்க அறிந்திருக்க வேண்டும். எவ்வளவு பிரமாதமான இயந்திரமாக இருந்தாலும், நர்ஸின் அன்பையும் ஆதரவையும் அந்த இயந்திரத்தால் தர முடியாது. இவ்வாறு டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.
கல்லுாரி அறங்காவலர் மனோகரன் வரவேற்றார்.அமைச்சர் வேலுமணி, அறங்காவலர் டாக்டர் நடராஜன், 'வானொலி' தங்கவேலு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202009:31:19 IST Report Abuse
ருத்ரா பெற்ற தாய் என்பதற்கு நிகரான வார்த்தயே கிடையாது. வாழ்த்துக்கள் இது போன்ற சேவைகளை ஊக்குவிக்கும் நம் தினமலர் இதழால் பெருமை அடைகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X