கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினிக்கு சட்டவிரோத காவலா: அரசுக்கு நோட்டீஸ்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

சென்னை: சட்டவிரோத காவலில் நளினி உள்ளாரா; இல்லையா என்பதற்கு, தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், நளினி உள்ளிட்ட நால்வருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் மூவருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின், கருணை மனு அடிப்படையில், நளினிக்கு மட்டும் ஆயுளாக குறைக்கப்பட்டது. மற்ற மூவருக்குமான துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக, உச்ச நீதிமன்றம் குறைத்தது.

இந்த வழக்கில் தற்போது, ஏழு பேர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். ஏழு பேரையும் விடுதலை செய்ய, தமிழக அரசு அளித்த பரிந்துரை, கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோத காவலில் இருப்பதாக அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.

மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில், வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ''ஏழு பேரையும் விடுதலை செய்ய, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த பின்னும், சிறைக்குள் வைத்திருப்பது சரியல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு, கவர்னர் கட்டுப்பட வேண்டும். சட்டவிரோதமாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்,'' என்றார்.

அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''ஏழு பேர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நேரடியாக உத்தரவு பிறப்பிக்க, அரசுக்கு அதிகாரம் இல்லை,'' என்றார்.

சட்டவிரோத காவலில் நளினி உள்ளாரா; சட்டப்படி சிறையில் உள்ளாரா என்பது குறித்து, அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், ௧௮ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X