சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அக்காவின் காதலனை கொலை செய்த தம்பி கைது

Added : பிப் 12, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக்குளத்தில், சகோதரியின் காதலனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக்குளம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த முத்துசாமியின் மகன் மணிகண்டன், 20; ஆட்டோ டிரைவர். கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் தினேஷ்குமார், 22.உறவுமுறையில் பெரியப்பா மகனான இவருக்கும், மணிகண்டனின் மூத்த சகோதரிக்கும் காதல் ஏற்பட்டது. இதை மணிகண்டன் கண்டித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தனது சகோதரியுடன் தினேஷ்குமார் பழகுவதை கைவிட வேண்டுமென மணிகண்டன் பேசியுள்ளார்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால், தினேஷ்குமாரை குத்தியுள்ளார்.இதில், தினேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X