பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட அனுமதி: புவியியல் துறை பணியில் தொய்வு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

ஊட்டி : 'நீலகிரியில் விதிமுறையின் கீழ் கட்டடம் கட்ட விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, விரைவில் புவியியல் துறையின் ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, கட்டட அனுமதியில் உள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, பேரிடர் பட்டியலில் உள்ள பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம்; அந்த இடத்தில் புவியியல்; வனத்துறை; வேளாண் பொறியியல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த முதல் நிலை அலுவலர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொள்வர்.

'அங்கு நிலச்சரிவு அபாயத்துக்கு இடமில்லை,' என, உறுதி செய்து, அதன் அடிப்படையில், நிபந்தனையுடன் தடையின்மை சான்று வழங்கிய பின், அங்கு கட்டடம் கட்டலாம். அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் பகுதிகளில் கட்டுமான கட்ட அனுமதி கிடைக்காது.புவியியல் துறை கள ஆய்வில் தொய்வு!வீடு கட்ட மூன்று துறை அனுமதி தேவை என்றாலும், அதில், புவியியல் துறையின் பங்கு முக்கியமாகும். இத்துறை அலுவலகம், இம்மாவட்டத்தில் இல்லை. திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள புவியியல் துறை அதிகாரி; அவரின் உதவி அதிகாரி ஆகியோர் விண்ணப்பத்தை பரிசீலித்து கள ஆய்வு மேற்கொள்வதில் பெரும் தாமதம் ஏற்படுகிறது.இதனால், அனைத்து ஆவணங்கள் முறையாக வைத்துள்ள, மக்கள் மாத கணக்கில் அனுமதிக்காக காத்திருக்கும் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலதாமதத்தால், கட்டுமான பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டு, வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்,'நீலகிரிக்கென தனியாக ஒரு புவியியல் அதிகாரியை நியமிக்க வேண்டும்,' என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''நீலகிரியில் கட்டடம் கட்ட, முறையான விண்ணப்பங்களுக்கு விரைவில் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. புவியியல் துறையின் ஆய்வில் தாமதம் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X