பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்கேன் பணியாளர்களை தவறாக பயன்படுத்தாதீர்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

சென்னை: பழைய பத்திரங்களை ஸ்கேன் செய்ய ஒப்பந்த நிறுவனங்களால் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களை சரி பார்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

பதிவுத்துறையில் 1865 முதல் 2009 வரையிலான காலத்தில் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனங்களை பதிவுத்துறை நியமித்துள்ளது.

இந்நிறுவனங்கள் ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இரண்டு நபர்கள் வீதம் பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்கள் வாயிலாக பழைய பத்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஸ்கேன் செய்யப்படும் பத்திர பக்கங்களை அந்தந்த அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும். இந்த பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில் ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரங்களை சரி பார்க்க வேண்டிய சார் பதிவாளர்கள் அதற்கும் ஒப்பந்த நிறுவன பணியாளர்களையே பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சில கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஸ்கேன் பணியாளர்களை சரிபார்ப்பு பணிக்கு பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்கேன் பிரதிகளை சரி பார்ப்பதில் அலட்சியமாக செயல்படும் சார் பதிவாளர்களும் துறை ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X