பொது செய்தி

தமிழ்நாடு

'சியெட் டயர்' ஆலை திறந்தார் முதல்வர்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார்: ''தமிழகத்தில் தொழில் துவங்கக் கூடிய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் எங்கள் அரசு முன்னிருந்து தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தரும்'' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதுார் கண்ணந்தாங்கல் கிராமத்தில் 163 ஏக்கர் பரப்பளவில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் 'சியெட் டயர்' தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த ஆலையை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக திகழும் தமிழகம் டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. இரு சக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

டயர் உற்பத்தி தொழிற்சாலையின் சிறப்பான வெற்றிக்கு தேவையான அனைத்தும் தமிழகத்தில் உள்ளன. அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க அரசு சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது.

பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் நின்ற நிறுவனங்கள் இன்று புத்துயிர் பெற்று திறக்கப்பட்டு வருகின்றன.பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் தமிழகத்தில் உருவாவதால் டயர் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் குறைவான விலையில் இங்கேயே கிடைக்கும் நல்ல சூழல் உருவாகும். இதனால் உற்பத்தி செலவு குறைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

'சியெட்' நிறுவனம் தன் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கியது போல் விரைவில் தன் ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் துவக்க வேண்டும். தமிழத்தில் தொழில் துவங்கக்கூடியஅனைத்து தொழிற்சாலைகளுக்கும் எங்கள் அரசு முன்னிருந்து தேவையை அனைத்து ஒத்துழைப்பையும் தரும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தொழில் துறை அமைச்சர் சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தொழில் துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், சியெட் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆலையில் தினமும் 28 ஆயிரத்து 500 கார் டயர்களும் 2500 இருசக்கர வாகன டயர்களும் தயாரிக்கப்பட உள்ளன. மேலும் 1000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X