பொது செய்தி

தமிழ்நாடு

கிராமப்புற சுகாதார பணி கண்காணிக்க புது செயலி

Added : பிப் 12, 2020
Advertisement

திருப்பூர் : கிராம சுகாதார பணிகளை, மாநில அளவில் கண்காணிக்க, புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சுகாதார பணிகள், 'துாய்மை இந்தியா' இயக்கம் என்ற பெயரில், ஊராட்சிகளில் நடந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை, திறந்தவெளி கழிப்பிடம் ஒழித்தல், தனிநபர் இல்லக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட, ஊராட்சி அளவிலான பணிகளை, கண்காணிக்க, ஊக்குவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:கிராம சுகாதார பணிகளை, மாநில அளவில் கண்காணிக்க, 'துாய்மை தமிழகம்' என்ற புதிய மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஊக்குவிப்பாளர்கள் இணைக்கப்பட உள்ளனர். பெயர், முகவரி, ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின், பயனாளர் குறியீடு, கடவு சொல் அனுப்பி வைக்கப்படும். பள்ளி துாய்மை, கழிப்பிட துாய்மை பணி நடக்கும் இடத்துக்கு, ஊக்குவிப்பாளர் சென்று பார்க்க வேண்டும். ஆரம்ப நிலை, பணி நடக்கும் நிலை, நிறைவு நிலை என, மூன்று போட்டோக்களை எடுத்து, தகவல்களை சமர்ப்பித்ததும், நேரடியாக ஆன்லைனில் பதிவேற்றமாகும். ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள், அங்கிருந்தே கண்காணிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X