பொது செய்தி

தமிழ்நாடு

கோடைகாலத்தில் மின்சாரம் தடையின்றி வழங்க ஏற்பாடு

Added : பிப் 12, 2020
Advertisement

ஊட்டி : கோடையில் தடையின்றி மின்சாரம் வினியோகிக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரியில், 12 மின் நிலையங்கள் மூலம் நாள்தோறும், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். கடந்த ஆண்டு அதிகளவில் மழை பெய்ததால் இங்குள்ள, 13 அணை மற்றும், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களுக்கு அதிக அளவில் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் இரண்டாவது வாரத்தில், கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மின் உற்பத்தி தேவை அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.

கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இங்குள்ள,12 மின் நிலையங்களில் உள்ள, 32 பிரிவுகளில் பழுது ஏதாவது இருந்தால், அந்தந்த மின் வட்டத்தில் உள்ள செயற்பொறியாளர்கள் தலைமையில், உடனடியாக பணிகளை செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்குந்தா மின் வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் ரவி கூறுகையில், ''கோடையில் தடையின்றி மின்சாரம் வினியோகிக்கும் வகையில், அந்தந்த மின் வட்ட செயற்பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

''முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முன் கூட்டியே எடுக்கப்பட்டுள்ளதால், பிரச்னை இல்லை. குந்தா அணை உட்பட பிற அணைகளில் தேவையான தண்ணீர் இருப்பில் உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X