அரசியல் செய்தி

தமிழ்நாடு

கெடு முடிந்தும் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

Added : பிப் 12, 2020
Advertisement

அவிநாசி : கெடு முடிந்தும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர், செலவுக்கணக்கு தாக்கல் செய்யவில்லை.

தமிழகத்தில், சென்னை மற்றும் ஒன்பது மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களுக்கு, கடந்த டிச., 27 மற்றும் 30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஜன., 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உட்பட, 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்து, பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட, வேட்பாளர்கள், செலவுக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு, கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்தது.

கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், அடுத்த மூன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது. இருப்பினும், பல வேட்பாளர்கள், இன்னும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. அதிகாரிகள் கூறுகையில், 'செலவுக்கணக்கு தாக்கல் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கு மாறு, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் கமிஷன்அறிவுறுத்தியுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X