சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித் தலைவர் மீது வன்கொடுமை வழக்கு

Added : பிப் 12, 2020
Advertisement

சூலுார் : பீடம்பள்ளி ஊராட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பீடம்பள்ளி ஊராட்சியில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குமார வேல் தலைவராக உள்ளார். இவர் கடந்த முறை தலைவராக இருந்தபோது, அப்போதைய தாசில்தார் பக்தவச்சலத்துடன் சேர்ந்து, கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடத்தை பிரித்து, நில உபயோக மாற்றம் செய்யாமல், 90க்கும் மேற்பட்டோருக்கு, பட்டா வழங்கியதாக புகார் எழுந்நது.இதுகுறித்து, அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கணேசன், அவர்களிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து, சூலுார் போலீசாரிடம் கணேசன் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து, கோவை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் கணேசன் வழக்கு தொடர்ந்தார். புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன் பின்னரும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.இந்நிலையில், கடந்த, 30ம் தேதி கணேசன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, கோர்ட் உத்தரவுப்படி, ஊராட்சித் தலைவர் குமாரவேல், அரசு அதிகாரி பக்தவச்சலம் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X