'உ.பி.,யின் தியோபந்த் நகர் தான் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்'

Added : பிப் 12, 2020
Advertisement

சஹாரான்பூர்: உத்தர பிரதேசத்தில் உள்ள தியோபந்த் நகரை, பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சஹரன்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

தியோபந்த் நகரம், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என, நான் ஏற்கனவே கூறியுள்ளேன். ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகள், அங்கிருந்துதான் வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்ப்பதும், இந்தியாவை எதிர்ப்பதும் ஒன்றுதான். இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, சஹரன்பூர் எம்.பி., ஹாஜி பஸ்லூர் ரஹ்மான் கூறுகையில், ''தியோபந்த் சுதந்திர போராளிகளின் கர்மபூமி. தியோபந்தை சேர்ந்த உலேமாக்கள், சுதந்திரப் போரில் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அமைச்சர் அந்த இடத்தை பயங்கரவாதத்துடன் ஒப்பிடுகிறார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X