பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் அடுத்த வாரம் அகழாய்வு

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை: கீழடியில் அடுத்த வாரம் ஆறாம் கட்ட அகழாய்வு துவங்க உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே மத்திய தொல்லியல் துறை மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை இரண்டு முறையும் அகழாய்வுகளை நடத்தி உள்ளன. இந்த ஆண்டும் தமிழக தொல்லியல் துறை அங்கு அகழாய்வை நடத்த உள்ளது. இந்தவாரம் அதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் பணிகளைத் துவக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பிப். 14ம் தேதி தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 15, 16ம் தேதிகளில் விடுமுறையும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் குறித்த விவாதமும் நடைபெற உள்ளது. அதனால் துறைசார்ந்த பணிகள் உள்ளன.

அதைத் தொடர்ந்து 29ம் தேதி தொல்லியல் அலுவலர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தொல்லியல் மாணவர்களும் பங்கேற்கின்றனர்.அதனால் அகழாய்வுக்குத் தேவையான ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அடுத்த வார இறுதியில் பணிகளை துவக்கி விடுவோம். தேர்வுகளை முடித்து மாணவர்கள்பங்கேற்பதில் சிரமம் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X