ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய இலங்கை மிதவை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய 'இலங்கை மிதவை'

Added : பிப் 12, 2020
Share

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் இரும்பு மிதவைகள் ஒதுங்கின.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் 3 இரும்பு மிதவைகள் இணைந்த நிலையில் கரை ஒதுங்கின. 6 அடி நீளம் 2 அடி உயரமுள்ள இந்த மிதவைகள் இலங்கை ராணுவத்தினர் கடல் ஆறு குறுக்கே பாலம் அமைக்க பயன்படுத்த கூடியவை.

மார்ச் 6, 7 ல் கச்சத்தீவு திருவிழாவுக்கு பாலம் அமைக்க இலங்கை கரையில் வைத்திருந்த மிதவைகள் அலைகளால் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மிதவைகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X