பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது நாளாக படகு போக்குவரத்து ரத்து

Added : பிப் 13, 2020
Advertisement

நாகர்கோவில்: சூறாவளி காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து மூன்றாவது நாளாக நேற்றும் ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்துக்கழக படகுகள் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக மூன்று படகுகள் உள்ளன. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை படகுகள் இயக்கப்படும்.

கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரிப்பால் படகுகள் இயக்க முடியாத நிலை உள்ளது. பிப். 10ம் தேதி ஒன்றரை மணி நேரம் மட்டும் படகுகள் இயங்கின. நேற்று முன்தினம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. நேற்று காலை 9:30 மணி வரை படகுகள் இயக்கப்பட்டது. அதன் பின்னர் காற்றின் வேகம் அதிகமானதால் படகு போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X