தமிழ்நாடு

ண காட்டுயானை பயிர்களை சேதப்படுத்துவது... தொடர்கிறது உயிர்பலி அச்சத்தால் விவசாய பணிகள் பாதிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

தேவாரம், தேவாரம் தோட்டப்பகுதியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன் ஆட்களை அடித்துக்கொல்லும் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் தொடர்கிறது. இதனால் விவசாயிகள் உயிர்பலி அச்சத்தில் உள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த யானையிடம் சிக்கி இதுவரை தேவாரம் பகுதியை சேர்ந்த 11 பேரும், கேரளாவில் இருவரும் பலியாகியுள்ளனர். இரை, தண்ணீர் தேடி தோட்டத்திற்குள் நுழையும் போது ஆட்கள் நடமாட்டம் இருந்தால், அவர்களை நேரடியாக தாக்கிக் கொல்கிறது.பெரம்புவெட்டி புலத்தில் சுரேஷ் என்ற விவசாயி, தோட்டத்திற்குள் யானை நுழைவதை தடுக்க 5 அடி ஆழத்திற்கு அகழி வெட்டி வைத்துள்ளார்.பாறை நிறைந்த ஒரு இடத்தில் மட்டும் 3 அடி ஆழத்தில் அகழி உள்ளது. சரியாக அதன் வழியாக நுழையும் யானைகுழாய்களையும், தென்னை மரத்தையும் சேதப்படுத்துகிறது.கடந்த ஒரு வாரமாக இதன் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த யானை விரட்டியதில் மைனாவதி, முருகன் காயமடைந்தனர்.தேவாரம் அசோகர் பசுமை இயக்க நிர்வாகி அ.திருப்பதிவாசகன் கூறுகையில், ''இந்த ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தால், மலையடிவாரத்தை ஒட்டியுள்ள 3 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் சாகுபடிமுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தவுடன், அந்த யானையை 'கும்கி'களின் உதவியோடு பிடித்து முகாமிற்கு கொண்டு சென்று விட்டனர்.இந்த யானை 13 பேரை கொன்ற பின்னரும் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.யானை-மனித மோதலில் எப்போது உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X