பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை அறிவிப்பு: தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Added : பிப் 13, 2020
Advertisement

மூணாறு, மூணாறில் அமைக்கப்பட உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் கிளை அலுவலகம் மூலம்தோட்டத்தொழிலாளர்கள் எளிதில் பயனடைய வாய்ப்புள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைஅடிமாலி, கட்டப்பனை, தொடுபுழா ஆகிய பகுதிகளிலும்,அதன் சலுகைகளை பெற்று தரும்கிளை அலுவலகங்கள் அடிமாலி, தொடுபுழா ஆகிய பகுதிகளிலும் உள்ளன. அவை நீண்ட தொலைவில் உள்ளதால்,மூணாறைச் சுற்றிலும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.இதுதொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் பதிலளித்த மத்திய தொழில்துறை அமைச்சர் சந்தோஷ்காங்வர், நாட்டில் முதற்கட்டமாக 35 இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று மூணாறில்அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.மத்திய அரசின் நடவடிக்கையால், மூணாறு பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் எளிதில் பயன் பெற வாய்ப்புள்ளதால் மகிழ்ச்சி அடைந்து அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X