பொது செய்தி

தமிழ்நாடு

ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது; அரசு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: அரசு பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது துவங்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்பட்டு ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2019ல் ஆகஸ்ட் மாதத்துடன் 13வது ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது.

செப். முதல் 14வது ஊதிய ஒப்பந்தத்தின் படி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஊதிய ஒப்பந்தம் குறித்த முதல்கட்ட பேச்சு துவங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சு நடத்தப்பட்டு புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டும்.

செப். 1ம் தேதியில் இருந்து 14வது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குரிய பேச்சு இன்னும் நடக்கவில்லை. இதனால் அனைத்து போக்குவரத்துக் கழக கிளைகளிலும் தொழிற்சங்கங்களின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரசு ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த குழு அமைக்காமல் தாமதித்தது. பின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின் குழு அமைக்கப்படடது.

அக்குழு வழக்கை காரணம் காட்டி தாமதித்தது. வழக்கு நவம்பரில் முடிவுக்கு வந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பொங்கல் சிறப்பு பஸ்களை காரணம் காட்டி ஒப்பந்த பேச்சை நடத்தவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடரை காரணமாக கூறுகின்றனர். பின் மாநகராட்சி தேர்தலை சுட்டிக் காட்டுவர்.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரே அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவர் அமைச்சராக பேச்சு நடத்துவாரா அல்லது தொழிற்சங்க நிர்வாகியாக பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. விரைவில் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X