மாவட்டத்தில் குறைகிறது பால் உற்பத்தி கோடை துவங்கும் முன்னரே சிக்கல்

Added : பிப் 13, 2020
Advertisement

கம்பம்:பொதுவாக கோடையில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். ஆனால் மாவட்டத்தில் இந்தாண்டு கோடை துவங்கும் முன்பே அதன் உற்பத்தி கணிசமாக குறையத்துவங்கியுள்ளது.தேனி வேளாண் தொழில்சார்ந்த மாவட்டமாகும். அதேபோல பசு மற்றும் எருமை வளர்ப்பு, ஆடு வளர்ப்பும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் பாலை கோழிக்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல்டைரி, மலநாடு டைரி, பெண்டா மட்டுமின்றி தமிழக நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மட்டும் தினமும் குறைந்தது 2 லட்சம் லிட்டர் பால் கொண்டு செல்லப்படுகிறது.தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினமும் ஒரு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மாவட்டத்தில் வருஷநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் தான் அதிகம் பால் உற்பத்தியாகிறது. எனினும் தற்போதே உற்பத்தி குறையத்துவங்கி உள்ளது.விவசாய சங்க செயலாளரும், பால் உற்பத்தியாளமாருமான சுகுமாறன் கூறுகையில்,பொதுவாக கோடையில் பால் உற்பத்தி குறையும். ஆனால் இந்தாண்டு கோடை துவங்கும் முன்பே பால் உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது. கடும் வறட்சியும், கால்நடைகளுக்கு காணை நோய் தாக்குதலும் உற்பத்தியை பாதித்து விட்டது. கால்நடை பராமரிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.இருந்தாலும் பசுந் தீவன தட்டுப்பாடு உள்ளதால், பால் உற்பத்தி குறைவை தடுப்பது சவாலான விஷயமாகும், என்றனர்.பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என ஆவின், மற்ற நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X