சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தாக்கி விவசாயி பலி: உடலுடன் உறவினர்கள் போராட்டம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement

கன்னிவாடி: கன்னிவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில், உடலை மீட்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. நாயோடை நீர்தேக்கம், ஆண்டரசன்பட்டி, கருப்பன்சேர்வைகாரன்பட்டி, டி.பண்ணைப்பட்டியில் வாழை, சோளம், தென்னை பயிர்களை சேதப்படுத்தின. ஜன. 5ல், பண்ணைப்பட்டி கோம்பையில் விவசாயி முருகன் யானை தாக்கி இறந்தார்.

சிறப்பு விரைவுப்படை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியது. இருப்பினும் யானைக் கூட்டம் அதே பகுதியில் சுற்றி வருகிறது. துாங்கிய விவசாய பலிநேற்று அதிகாலை பழனிக்கவுண்டன்புதுார் தோட்டத்துசாலை பகுதியில் யானைகள் புகுந்தன. ஒரு குடிசையின் மேற்கூரையை சேதப்படுத்தி, உள்ளே துாங்கிய வெள்ளையனை 70, தும்பிக்கையால் சில அடி துாரம் இழுத்துச்சென்று, மிதித்துக் கொன்றன.

விவசாயிகளுக்கு நிரந்தர பாதுகாப்பை வலியுறுத்தி, வெள்ளையனின் உடலை மீட்க இப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், மாவட்ட வனஅலுவலர் வித்யா பேச்சுவார்த்தை நடத்தினார். கூடுதல் கண்காணிப்பு மூலம் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, சோலார் வேலி அமைத்தல், யானை தாக்கும் சம்பவங்களை தடுக்க துரித ஏற்பாடு, போன்ற உத்தரவாதத்தை வனத்துறை அளித்தது. பின்னரே, வெள்ளையனின் உடல் மீட்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X