தமிழ்நாடு

முடங்கிப்போன ஊராட்சி நிர்வாகங்கள் பணபரிவர்த்தனை உத்தரவால் குழப்பம்

Added : பிப் 13, 2020
Advertisement

கம்பம், பணபரிவர்த்தனைக்கு புதுப்புது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்படாததாலும், ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கியுள்ளன.உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சி தலைவருக்கு மட்டும் பணிகளின் செலவுகளுக்கான 'செக்' போடும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.தலைவர் மற்றும் துணைத்தலைவர் 'செக்'கில் கையெழுத்திட்டு, கிராம வளர்ச்சி பணிகளை செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது பண பரிவர்த்தனைக்கு தினமும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பாக 'செக்' போடும் பழக்கம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் அதிலும் 'செக்' வைத்தனர். அப்பரிவர்த்தனைக்கு முன்னதாக தயாரிக்கப்படும் செலவு விபரங்களுக்கு ஒன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதலை பெற வேண்டும். பின்னர் அதனை பிரின்ட் எடுத்து அதில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட்ட படிவத்தை, சம்பந்தப்பட்ட வங்கியில் காண்பித்து, ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும்.இதுபோன்ற உத்தரவுகளால் ஒரு மாதத்திற்கு முன்பாக பதவியேற்றுள்ள தலைவர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இது ஒருபுறமிருக்க கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளும் அனுமதிக்கவில்லை. இதனால் எந்தப்பணியும் செய்ய முடியாமல் நிர்வாகங்கள் முடங்கியுள்ளன.ஊரக வளர்ச்சித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது,பணபரிவர்த்தனை தொடர்பாக ஊராட்சி தலைவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க விரைவில் அறிவிப்பு வெளியாகும். நிதி ஒதுக்கீடு செய்ய அரசை வலியுறுத்தியுள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X