கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குரூப்- 4 தேர்வு முறைகேடு சி.பி.ஐ., விசாரணை கோரி மனு

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை: டி.என்.பி.எஸ்.சி.,-'குரூப்-4' தேர்வு முறைகேட்டில் சி.பி.ஐ., விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: டி.என்.பி.எஸ்.சி.,க்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. அதன் தேர்வுகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலகங்கள் இல்லை.

கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறையினரை நம்பி டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் நடக்கின்றன. அரசு 'எல்காட்' எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. டி.என்.பி.எஸ்.சி., முக்கிய பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கிறது. விடைத்தாள்களுக்கு சீல் வைப்பது, அவற்றை பாதுகாக்க தகுந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை. இவை முறைகேடு களுக்கு வழிவகுக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் செல்லாது என ரத்து செய்ய வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி.,-குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். அது மாநில அரசின் கீழ் வருவதால், சுதந்திரமாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் மனு செய்தார். விரைவில் விசாரணைக்கு வரும். இதுபோல் தாக்கலான மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
13-பிப்-202016:11:22 IST Report Abuse
Gnanasekaran Vedachalam இந்த தேர்வில் எப்படி இவ்வளவு குளறுபடி நடந்து உள்ளது முறையான அமைப்பு வரன்முறை படுத்த பட்டது தன்னாட்சி அதிகாரம் சிறந்த நிர்வாக அமைப்பு தலைவர் உறுப்பினர்கள் செயலாளர் இவர்களை மீறி இந்த களேபரம் எப்படி முறையற்றவர்கள் கையில் எடுத்து கொண்டார்கள் எப்படி இவர்கள் செயல் பாடு அபார அளவில் உள்ளது தமிழகத்தில் ஒரு லச்சத்திற்கும் அதிகமான காவலர்கள் உள்ளனர் புலன் ஆய்வு துரை வேறு ஒண்ணுமே புரியவில்லை சட்டம் ஒழுங்குக்கு நிரபராதி ரொம்ப பயப்படுகிறார்கள் முறையற்ற பேர்வழிகள் விளம்பர பலகை வைத்து ஊழல் l செய்து உள்ளார்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X