இந்தியாவின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா?

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (8)
Advertisement
US,CIA,CentralIntelligenceAgency,India,இந்தியா,அமெரிக்கா,உளவு

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்களை, அமெரிக்கா, பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருவதாக, அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, 'கிரிப்டோ ஏ.ஜி.,' என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனத்துடன், இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. தங்கள் நாட்டைச் சேர்ந்த உளவாளிகள், ராணுவ வீரர்கள், துாதர்கள் உள்ளிட்டோர் குறித்த ரகசியங்களை பாதுகாக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த, 1951ல், இந்த சுவிட்சர்லாந்து நிறுவனம், அமெரிக்காவின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., உடன் ஒப்பந்தம் செய்தது. பின், 1970ல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், இது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளின் தகவல்களும், அமெரிக்காவுக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
13-பிப்-202011:54:39 IST Report Abuse
Krishna All White-Majority Western Countries are Very Dangerous as they will Do Anything for their Supremacy And as they Heavily Genocided Native People To Extinction (North & South America, Australia etc etc)
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
13-பிப்-202008:29:23 IST Report Abuse
atara Give a job for every one in a family on Americian project task there by they will get rest left over details.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202007:38:17 IST Report Abuse
ஆப்பு எதுக்கு அவ்வளவு தூரம்? எல்லா ஊர்லேயும் ஃப்ரீ வைஃபைன்னு கூகுள் சேவை கிடைக்குது. அதன் மூலம் போலுஸ், ராணுவ அதிகாரிங்க கூட தகவல் பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். கூகுள் சேவை செய்ய வரவில்லை. தகவல் திரட்டவே வந்துருக்குன்னு இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X