தமிழ்நாடு

தேனியில் ஜனநிதி நிறுவன கிளை துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

தேனி :''தேனியில் ரூ. 2கோடி 'டிபாசிட்' பெறதிட்டமிட்டுள்ளதாக,'', தேசிய இளையோர் கூட்டுறவு சங்க ஜனநிதி மதுரை மண்டல செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.தேனியில் தேசிய இளையோர் கூட்டுறவு சங்க ஜனநிதி சேமிப்பு மற்றும் கடன் நிதி நிறுவனம் துவக்கவிழா நடந்தது. தேனி கிளை செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். மதுரை மண்டல செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் தலைமை வகித்து பேசுகையில், ''ஒரு ஆண்டில் தேனி மாவட்டத்தில் ரூ.2 கோடி 'டிபாசிட்' பெற்று அதில் 75 சதவீதம் கடனாக வழங்கப்படும். 25 சதவீதம் முதிர்ச்சி பெற்ற முதலீடுகளுக்கு இருப்பு வைக்கப்படும். 'டிபாசிட்டிற்கு' தேசிய வங்கி வட்டியை விட 8 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 9.5 வரை வட்டி வழங்கப்படும். கடனுக்கு சராசரியாக வட்டி 9.44 சதவீதம் வசூலிக்கப்படும்,'' என்றார். தேசிய நிர்வாக குழு இயக்குனர் உமேஷ் லோண்டா விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்,'' இந்தியாவில் 31 வது கிளை தேனியில் துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4வது கிளை. ஆண்டுக்கு ரூ.100 கோடி வரவு, செலவு மேற்கொள்கிறது. நாட்டின் மிகப்பெரிய சக்தியான இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். இளைஞர்கள், சிறு வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்கப்படும். ஆக்கப்பூர்வமான புதிய தேசம் உருவாக்க வழிவகை செய்யப்படும்,''என்றார்.மத்திய கூட்டுறவு வேளாண் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்நோக்கு நிறுவனமாக செயல்படும். இளைஞர்களுக்கு சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒரு லட்சம் பேருக்க திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அதில் 60 சதவீத பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். விளையாட்டில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி 2024 ல் ஒலிம்பிக்கில் சாதனை படைக்கும் அளவிற்கு உயர்த்தப்படும். மத்திய அரசு இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 22 வீரர்களைதேர்வு செய்து போட்டிகளில் பங்கேற்பார்கள், என்றார். பாலக்காடு கிளை பொது மேலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X