வராகநதி ஓடுபாதையில் மரத்துண்டுகளால் பாதிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

பெரியகுளம், பெரியகுளம் வராகநதி ஓடுபாதையில் புதுப்பாலம், ஆடுபாலம், தண்டுப்பாலம் கீழ்ப்பகுதியில், கடந்த வெள்ளத்தில் மலைப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் மரத்துண்டுகள் கிடக்கிறது. கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் நதியில் செல்லும் சிறிதளவு தண்ணீரையும் மரங்கள் தடுத்து நிறுத்துகிறது.இதனால் வராகநதியை நம்பியுள்ள வடுகபட்டி, தென்கரை, தாமரைக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கும், கீழவடகரை, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் அமைந்துள்ள குடிநீர் உறைகிணறுகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வராகநதியில் ஆங்காங்கே கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X