மக்காச்சோள பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோள பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு உத்தரவு

Added : பிப் 13, 2020
Share

சென்னை: மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிப்., 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு மாற்றாக மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைப்பதோடு பாசன தேவை குறைவு என்பதும் இதற்கு காரணம்.

அதேநேரம் படைப்புழுக்கள் தாக்குதலால் மக்காச்சோள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இதற்காக படைப்புழு ஒழிப்பு திட்டத்தை 48 கோடி ரூபாயில் அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி துவங்கி நடந்து வருகிறது.

படைப்புழுக்களால் பயிர் பாதித்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய வைக்க வேளாண்துறையினர் முடிவு செய்துள்ளனர்.மக்காச்சோளம், சோளம், எள், துவரை, உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு பிப்., 15ம் தேதி கடைசி நாள். அதற்குள் விவசாயிகளை பயிர்காப்பீடு செய்ய வைக்க வேண்டும் என வேளாண்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தோட்டக்கலை பயிரான வாழைக்கு காப்பீடு செய்வதற்கு பிப்., 28 ம் தேதி கடைசி நாள். இதற்கும் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவை அடுத்து விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய வைப்பதற்கான பணிகளில் அந்தந்த மாவட்ட வேளாண்மை தோட்டக்கலை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X