செய்யாத தவறுக்கு சிறைவாசம் முதியவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Added : பிப் 13, 2020
Advertisement

இந்துார்: செய்யாத தவறுக்கு நான்கு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த பழங்குடியின முதியவருக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மத்திய பிரதேச அரசுக்கு ஜபல்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங். ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துார் சிறையில் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 'ஹுஸ்னா' என்ற கைதி 'பரோலில்' வெளிவந்த சில நாட்களில் இறந்து விட்டார். இது தெரியாத போலீசார் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாத தண்டனைக் கைதியை கைது செய்ய நீதிமன்றத்தில் 'வாரன்ட்' பெற்றனர். இதைத் தொடர்ந்து ஹுஸ்னாவைத் தேடிய போலீசார் அவருடைய பெயரைப் போல இருந்த 'ஹுசன்' என்ற பழங்குடியின முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை அறியாத முதியவரின் மகன் காணாமல் போன தந்தையை கண்டுபிடித்து தருமாறு ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் 'ஹேபியஸ் கார்பஸ்' மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஹுசனை தேடிய போலீசார் அவர்தான் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதை அறிந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் செய்யாத குற்றத்திற்காக நான்கு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த ஹுசனுக்கு ம.பி. அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தவறாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கைது செய்யும் போது ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்த போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X