பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில், மும்முனை மின்பாதை அமைக்கணும்!

Added : பிப் 13, 2020
Advertisement

அவிநாசி : அவிநாசி கிராமப்புறங்களில், மும்முனை மின் இணைப்பு வழங்கி, தொழில்வளம் மேம்பட உதவ வேண்டுமென, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மின்வாரியத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில், நேற்று நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன், மின்நுகர்வோரிடமிருந்து மனுக்களை பெற்றார்.சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், வழங்கிய மனு: செம்மாண்டம் பாளையம் மின் பாதையை சார்ந்து, கருமாபாளையம், சின்னேரிபாளையம், செம்பியநல்லூர் என, மூன்று ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில், பனியன், காடா உற்பத்தி, எம்ப்ராய்டரி, பிண்ணாக்கு, மர அறுவை, அரிசி ஆலை பல சிறு தொழில் கூடங்கள் உள்ளன.

தற்போதைய கணக்கீட்டின் படி, கிராமிய மின் பாதையிலிருந்து, நகரிய மின்பாதையாக மாற்ற, தேவையான மின் இணைப்புகள் உள்ளன. எனவே, எங்கள் ஊராட்சி பகுதியில், குடிநீர் பம்புகளை சீராக இயக்க, கிராம மின்பாதையை நகரின் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.துலுக்கமுத்துார், குப்பாண்டம்பாளையம், அய்யம்பாளையம் கிராம ஊராட்சிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கிய மனு:எங்கள் பகுதிகளில், ஏராளமான விசைத்தறி மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன.

எனவே, 24 மணி நேரமும், தடையின்றி மின் வினியோகம் வழங்கும் வகையில், மும்முனை மின்பாதை வழங்க வேண்டும் என ஏற்கனவே மனு வழங்கியிருந்தோம்.ஆனால், கிராமப்பு றங்களில் மும்முனை மின்சாரம் வழங்க, 300 தொழிற்சாலை மின் இணைப்புகள் தேவையுள்ள நிலையில், 274 இணைப்புகள் மட்டும் உள்ளது; இனி, 26 இணைப்புகள் அமையும் பட்சத்தில், மும்முனை மின் பாதை வழங்க முடியும் என விளக்கமளித்திருந்தனர். தற்போது, 310 தொழிற்சாலை இணைப்புகள் உள்ள நிலையில் மும்முனை மின்பாதை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X