சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.12 கோடி தங்கம்; 'ஐ- போன்கள்' பறிமுதல்

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ஐ - -போன்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 3.35 மணிக்கு 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற தேவி 40 என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரின் உள்ளாடைகளுக்குள் இருந்து 12.31 லட்சம் ரூபாய் மதிப்பிலான 294 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது.

அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ரவி 41 என்பவரிடம் நடந்த சோதனையில் அவரின் ஆடைகளுக்குள் இருந்து 12.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஷார்ஜாவில் இருந்து நேற்று காலை 5:30 மணிக்கு 'ஏர் இந்தியா' விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் குமார் 34 என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரின் ஆசனவாய்க்குள் இருந்து 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 988 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐ - -போன்கள்துபாயில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை வந்தது. அதில் வந்த ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த பஷீர் சையத் 24 என்பவரை சோதனையிட்ட போது அவரின் உடைமைகளுக்குள் இருந்து 24.14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐ -போன்கள் வாட்ச் மற்றும் டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரன்சிகள்
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 7:30 மணிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிப் கிப்லி 25 என்பவரை சோதனையிட்ட போது அவரது கைப்பைக்குள் இருந்து 'சவுதி ரியால்கள்' இந்திய ரூபாய் மதிப்பில் 7.36 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X