பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருந்தகம் திறப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர்.

இ.எஸ்.ஐ.,ல் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 16 மருந்தகங்கள் இயங்கிவந்தன.அண்ணாநகர் மற்றும் ஊத்துக்குளியில் புதிதாக இரண்டு மருந்தகங்கள் உருவாக்க அரசு அனுமதி பெறப்பட்டது. அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அண்ணாநகரில் புதிய மருந்தகம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது.ஊத்துக்குளியில், கிழக்கு ரத வீதியில், இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்படுத்த தனியார் கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் எனவும், காலை, 7:00 மணி முதல் 10:30 மணி வரை; மாலை, 4:00 முதல் 6:30 மணி வரை செயல்படும் என, போர்டும் வைக்கப்பட்டுள்ளது.ஆறு மாதங்களானநிலையில், மருந்தகம் இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை; பூட்டியே வைத்துள்ளனர். அதனால், ஊத்துக்குளி பகுதி தொழிலாளர்களின் அலைச்சல் இன்னும் தீர்க்கப்படவில்லை; மருத்துவ தேவைகளுக்கு, திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் உள்ள மருந்தகத்தையே நாடவேண்டியுள்ளதால், தினமும் அவதிப்படுகின்றனர்.தொழிலாளர் நலன் கருதி, ஊத்துக்குளியில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X