பொது செய்தி

இந்தியா

20 வெளிநாட்டு தூதர்கள் ஜம்மு - காஷ்மீரில் ஆய்வு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஐரோப்பிய நாடுகள் உட்பட, 20 நாடுகளுக்கான துாதர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்கு வந்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆக., 5ல் விலக்கி கொள்ளப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.கட்டுப்பாடுகள்:அதையடுத்து, அங்கு பல்வேறு
Kashmir,Jammu,ForeignEnvoys,Envoys,வெளிநாட்டு,தூதர்கள்,ஜம்மு, காஷ்மீர்,ஆய்வு

ஸ்ரீநகர்: ஐரோப்பிய நாடுகள் உட்பட, 20 நாடுகளுக்கான துாதர்கள், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்கு வந்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆக., 5ல் விலக்கி கொள்ளப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.


கட்டுப்பாடுகள்:


அதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான், பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரச்னை எழுப்பி வருகிறது. இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் கென்னத் ஜஸ்டர் உட்பட, 15 நாடுகளின் துாதர்கள், கடந்த மாதம், ஜம்மு - காஷ்மீர் சென்று, நிலைமையை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், 20 நாடுகளின் துாதர்கள் குழு, இரண்டு நாள் பயணமாக, ஸ்ரீநகருக்கு நேற்று வந்தது. ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளின் துாதர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். பாராமுல்லா நகருக்கு நேற்று அவர்கள் செல்வதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலையால், அது ரத்து செய்யப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தால் ஏரி பகுதிக்கு துாதர்கள் சென்றனர்.



கேள்வி எழுப்புவார்கள்


இந்த இரண்டு நாள் பயணத்தின்போது, யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள் மற்றும்மக்களை அவர்கள் சந்திக்க உள்ளனர். 'சிறப்பு அந்தஸ்து ஏன் நீக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள் ஏன் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டத்தில் எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

'தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டது ஏன் என, இந்தத் துாதர்கள் கேள்வி எழுப்புவர் என்று நம்புகிறேன்' என, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளார். இதற்கிடையே, துாதர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக, மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202006:10:59 IST Report Abuse
ஆப்பு எத்தனை முறை வருவாய்ங்க?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-பிப்-202006:07:04 IST Report Abuse
blocked user காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத ஆதரவு கூட்டத்தை அழித்தால் நிலைமை வெகுவாக மேம்படும். வெறுமனே சிறை மட்டும் வைத்து ஒரு பயனும் இல்லை. ட்வீட் செய்து கொண்டு, சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் வேலைகளை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X