பொது செய்தி

தமிழ்நாடு

'கிஷான்' கார்டு வழங்க கெடுபிடி வேண்டாமே!

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : விவசாயிகள் நலன்கருதி, கெடுபிடி காட்டாமல், 'கிஷான் கார்டு' வழங்கி, வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென, வங்கியாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசின் 'கிஷான்' கார்டு திட்டத்தில், விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்கப் படுகிறது. விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கிட, பயிர்க்கடன் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகள், எளிதாக நிதி உதவி பெறும் வகையில், 'கிஷான் கார்டு' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், சொந்தமாக விளை நிலம் வைத்துள்ள விவசாயி, அருகே உள்ள வங்கியில், 'கிஷான் கார்டு' பெற்றுக்கொள்ளலாம். அதைக்கொண்டு, அதே வங்கியில், தேவையான போது, பணம் எடுத்துக்கொள்ளலாம்.

அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 1.60 லட்சம் ரூபாய் வரை, பணம் எடுத்து, வட்டியுடன் திருப்பி செலுத்தலாம்.கடன் பரிவர்த்தனை, விண்ணப்ப பதிவு, காத்திருப்பு இல்லாமல், 'கிஷான்' கார்டை, கிரெடிட் கார்டு போல் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கியில் இருந்து பெறும் பணத்தை, எளிதாக வட்டியுடன் திருப்பி செலுத்தலாம்.மத்திய அரசின் இத்திட்டத்தை மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், 'கிஷான்' கார்டு வினியோகம் தொடர்பான, வங்கியாளர்கள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, 'கிஷான்' கார்டு திட்டம் குறித்து பேசினார்.கலெக்டர் பேசுகையில், 'விவசாயிகள், எளிதாக கடன் பெற்று, சாகுபடி பணியை துவக்கிட ஏதுவாக, 'கிஷான்' கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி, வங்கியில் எளிதாக கடன் பெற்று, திருப்பி செலுத்த முடியும்.பத்திரம், சிட்டா - அடங்கல், ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று, முறையாக பரிசீலித்து, 'கிஷான் கார்டு' வழங்க வேண்டும்;

அதற்காக, விவசாயிகளிடம் அதிகப்படியான கெடுபிடி செய்ய வேண்டாம்.மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தி, வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X