சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை வாயில் சிக்கியது விவசாயிகளின் வாழ்வாதாரம்!

Added : பிப் 13, 2020
Advertisement

பேரூர் : கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தைகளை பிடிக்கவும், வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோளம்பாளையம் கிராமத்தில், கடந்த ஆண்டு முதல், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தோட்டங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை, அவ்வப்போது வேட்டையாடி வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.சில நாட்களுக்கு முன், ராதாகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை, சினை ஆட்டை கொன்று, குட்டியையும் தின்றுள்ளது. தங்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து சிறுத்தைக்கு இரையாவதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஜன., 20ல் சிறுத்தை தாக்கியதில், குட்டிப்போடும் நிலையில் இருந்த ஆடு பலியானது. மதுக்கரை வனத்துறையினர் பார்வையிட்டு சென்றதோடு சரி. இழப்பீடு எதுவும் வழங்கவில்லை,'' என்றார்.நரசீபுரம் விவசாயி அருணாசலம் கூறுகையில், ''2018ல் யானையால் ஏற்பட்ட சேதத்துக்கு, போளுவாம்பட்டி வனத்துறையினர், ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க பரித்துரைத்தனர். மாவட்ட வன அலுவலகத்தில் கேட்டால், 'எவ்வித சான்றும் வரவில்லை' என்கின்றனர். இரண்டு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து வருகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X