பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில், 24,949 பேர் எழுதுகின்றனர் ; மார்ச் 2ல் துவங்குகிறது பொதுத்தேர்வு

Added : பிப் 13, 2020
Advertisement

திருப்பூர் : மார்ச் மாதம் துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, திருப்பூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து 949 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை, 30 ஆயிரத்து, 602 பேரும் எழுத உள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 24 வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வு மார்ச் 4 - 26 வரையிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 23- ஏப்., 13 வரையிலும் நடக்க உள்ளது. திருப்பூர் வருவாய் மாவட்ட அளவில் பிளஸ் 1 தேர்வினை, 215 பள்ளிகளில் பயிலும், 26 ஆயிரத்து, 92 பேர் (மாணவர் - 11,767; மாணவியர் - 14,144; தனித்தேர்வர்கள் - 181) தேர்வெழுத உள்ளனர்.பிளஸ் 2 தேர்வினை, 211 பள்ளிகளில் பயிலும், 24 ஆயிரத்து, 949 பேர் (மாணவர் - 11,082; மாணவியர் - 13,527; தனித்தேர்வர்கள் - 340) தேர்வெழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வினை, 349 பள்ளிகளிலும் படிக்கும், 30 ஆயிரத்து, 602 மாணவர்கள் (ஆண்கள் - 14,835; பெண்கள் - 14,911; தனித்தேர்வர்கள் - 856) தேர்வெழுத உள்ளனர். மொத்தம், 89 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நேற்று நடந்த மாவட்ட தேர்வுக்குழு கூட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள், 6 மையங்களில், 24 மணிநேரம் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளராக, 88 தலைமை ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக 1548 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வுகளில் முறைகேடுகள், காப்பியடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க, கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர்கள் தலைமையில், பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளுக்கு, 176 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படையும், பத்தாம் வகுப்புக்கு, 196 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உட்பட கல்வி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X