பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு பிரச்னை வியாபாரிக்கு அழைப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

பல்லடம் : ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, வியாபாரிகளை அழைத்து பேச, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பல்லடம் நகராட்சியில், தினசரி மார்க்கெட், வார சந்தை, உழவர் சந்தை, கடைவீதி உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பிரதான இடமாக என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்கள் சிலரின் ஆக்கிரமிப்பு காரணமாக, நூறு அடி அகலம் உள்ள என்.ஜி.ஆர்.,ரோடு, நாளுக்கு நாள் குறுகி வருகிறது. இதனால், நகராட்சி கமிஷனர் கணேசன், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், ஆக்ரமிப்புகள் அகற்றப்படும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி, வியாபாரிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டம், பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில், இன்று காலை 11:00 மணிக்கு நடக்கவுள்ளது. எனவே, கடை வீதியை சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்குமாறு, நகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X