பொது செய்தி

தமிழ்நாடு

பரீட்சைக்கு நேரமாச்சு... வினா வங்கி லேட் ஆச்சு!

Added : பிப் 13, 2020
Advertisement

கோவை : பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்க, இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், தற்போது வரை, வினாவங்கி வெளியிடாமல் இருப்பதால், பெற்றோர் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட, வினாவங்கி தயாரித்து விற்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில், தேர்வுக்கான பகுதிகளை குறிப்பிடும், 'ப்ளூ பிரிண்ட்' வெளியிடவில்லை.தேர்வுத்துறை வெளியிட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில், அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைக்கப்படவில்லை. இதனால், பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற, வினாவங்கியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடப்பாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சில பாடப்பிரிவுகளுக்கான வினாவங்கி மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு, வினாவங்கி வெளியிடவில்லை. பொதுத்தேர்வு, வரும் மார்ச் 4ம் தேதி துவங்குகிறது.இதனால், தேர்வுக்கு தயாராவதில் சிரமம் நீடிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்தாண்டும் பிளஸ் 1 வகுப்புக்கு, வினாவங்கி வெளியிடவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், புத்தகங்கள் அனுப்பினால், உடனே விற்பனைக்கு வைக்கப்படும். பெற்றோரின் கோரிக்கைகளை, இயக்குனரகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.- கல்வித்துறை அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X