சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மக்களுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?

கோவை : மேம்பால பணி நடக்கிறது என்பதற்காக இப்படியா! உக்கடம் முதல் ஆத்துப்பாலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினமும் விழுந்து, எழுந்துதான் செல்கின்றனர்.

இதை நன்கு அறிந்தும், சிறு மாற்று ஏற்பாடு கூட செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி, 2018ம் ஆண்டு மே மாதம் துவங்கியது. மூன்று கட்டமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உக்கடத்தில் இருந்து, கட்டுமானப்பணி நடக்கும் பாலம் வழியாக, கரும்புக்கடைக்கு செல்ல இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள், அந்த வழியை கடந்து செல்கின்றனர்.

வாகனங்கள் செல்ல மிகவும், குறுகலான பாதை மட்டுமே விடப்பட்டுள்ளது. குழிகளில் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. அது தெரியாமல், வாகன ஓட்டிகள் வாகனத்துடன் பள்ளத்தில் தடுமாறி விழுகின்றனர்.மனைவி, குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தடுமாறி சாய்கின்றனர். இதற்கிடையே, தள்ளுவண்டிக்காரர்களும் சில நேரம் இதில் புகுந்து உச்சக்கட்ட துன்பத்துக்கு உள்ளாக்குகின்றனர். ஆகவே, இதுவரை கைகட்டி வேடிக்கை பார்த்த, நெடுஞ்சாலைத்துறையினர், தற்காலிக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியில், உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக சரளைக்கற்கள் மற்றும் மண் போட்டு மட்டம் செய்து, இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி இந்த பிரச்னையில் தலையிட்டு, மக்கள் அனுபவிக்கும் இந்த தண்டனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202017:46:03 IST Report Abuse
Ram Pollachi புல்லுக்கு காடு, அன்பு நகர் வழியாக வந்தால் கரும்பு கடை ஆத்துப்பாலத்தை அடையலாம். ஆனால் பொறுமை வேணும். பாலத்தின் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது அதிலிருந்து காத்துக் கொள்ள மக்கள் ஆமை போல் நகர்கிறார்கள். ஆக இதுவும் கடந்து போகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X