தமிழ்நாடு

நகரை அழகுபடுத்த மாநகராட்சி ஆர்வம் 'ஐ லவ் ஆவடி'

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 நகரை அழகுபடுத்த மாநகராட்சி ஆர்வம் 'ஐ லவ் ஆவடி'

பசுமை பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள், 'செல்பி பாயின்ட்' என, ஆவடியை அழகுபடுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் ஜோராக நடந்து வருகின்றன.

ஆவடியில், மத்திய அரசின் பாதுகாப்பு தொழிற்சாலை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் பெருமளவு வசிக்கின்றனர். ஆவடி மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், காலை, மாலை சிறிது நேரம் அமைதிக்காகவோ, நடைபயிற்சி செய்யவோ பூங்காக்களை தேடுவர்.

அந்த வகையில், பருத்திப்பட்டு மக்களுக்கு, 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2019ல் அமைக்கப் பட்ட படகு சவாரியுடன் கூடிய பசுமைப்பூங்கா, வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும், 2018ல், 5.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'அம்ருத்' திட்டத்தின் கீழ், ஆவடி, பருத்திப்பட்டு, அந்தோணி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, லாசர் நகர், பாலாஜி நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில், ஆறு பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

மற்ற பூங்காக்களையும் அழகுபடுத்தும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியின் கீழ், 4 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில், 21 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது, மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒன்பது செயற்கை நீரூற்று பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதில் சிறிய பூங்காக்களுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், புல்தரைகள், வண்ண மின் விளக்குகள் இடம்பெறும்.சிறப்பம்சமாக, புதிய ராணுவ சாலை-, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலை சந்திப்பில், மாநகராட்சி அலுவலகம் அருகில், 'ஐ லவ் ஆவடி' என்ற ஆங்கில வாசகத்தில், 'செல்பி பாயின்ட்' அமைக்கும் பணி நடக்கிறது.

அதே இடத்தில், சிறிய பூங்கா, வண்ண மின் விளக்குகள், நீரூற்று என, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க, வடமாநில ஒப்பந்ததாரரை, மாநகராட்சி அதிகாரிகள் இறுதி செய்துள்ளனர்.


கவனம் செலுத்தும் கமிஷனர்!



தற்போதைய ஆவடி மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், திருச்சி மாநக ராட்சி கமிஷனராக பணியாற்றிய போது, 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திருச்சி மாநகராட்சியை, முன்னிலை பெறச் செய்தார்.திடக்கழிவு மேலாண்மை, நகரை துாய்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வதில், அதிக ஆர்வம் கொண்டவர்.அவர், ஆவடி மாநகராட்சிக்கு கமிஷனராக பொறுப் பேற்ற பின், குப்பைகளை தரம் பிரித்து பெறுவது, இந்த விஷயத்தில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் போன்ற பரிசு திட்டங்கள் அறிவித்தது என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இதன் தொடர்ச்சி யாகவே, நகரை அழகுபடுத்தும் வகையில், பூங்காக்கள் மேம்படுத்தப்படுகின்றன.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X