நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (26)
Share
PonRadhakrishnan,BJP,Vijay,விஜய்,பொன்ராதாகிருஷ்ணன்,பாஜ

கோவை: ''தனிப்பட்ட முறையில், நடிகர் விஜயுடன் எந்த பகையும் இல்லை,'' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில், 1998ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பா.ஜ., சார்பில் நாளை நடக்கிறது. பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

டில்லி தேர்தலில், இலவசங்களை புதிதாக அறிவித்தும், பல்வேறு பொய்களை கூறியும், நாடகம் நடத்தி கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ளார்.


latest tamil news



வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அவர்கள் நடிகர் விஜய்யிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் கடமையை செய்கின்றனர். தனிப்பட்ட முறையில், விஜய்க்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. பிரதமர் மோடியை, நடிகர் விஜய், கோவையில்தான் சந்தித்தார்.

நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பு குறிப்பிட்ட இடத்தில் நடத்தக்கூடாது என்றுதான், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் நடிக்கிறார் என்பதற்காக எதிர்க்கவில்லை. என்.எல்.சி., நிறுவனம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது தவறு. தனிப்பட்ட நடிகர் விஜயை நான் நேசிக்கிறேன்.

எஸ்.ஐ., வில்சன் கொலை, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சி, திருப்பூரில் கார் எரிப்பு ஆகியவை, தமிழக போலீசுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள யுத்தம். இதை அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X