பொது செய்தி

தமிழ்நாடு

'பிரெய்லி' வாக்காளர் அடையாள அட்டை

Added : பிப் 13, 2020
Advertisement

கோவை : கோவை மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சார்ந்த செயல்பாடுகளை மாநில தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் சத்ய பிரதா சாஹூ நேற்று ஆய்வு மேற்கொண்டார் ;

இக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில், அவர் பேசியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தம் மேற்கொள்ள, படிவங்கள் ஓட்டுபதிவு மையங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மூலம் பெறப்பட்டது.கடந்த, ஜன., மாதம் நான்கு கட்டங்களாக ஓட்டு பதிவு மையங்களில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலமும், 'ஆன்லைன்' வழியாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 596 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இதன் மீது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, பிரெய்லி முறையில் விபரங்கள் அடங்கிய வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப் பட்டது.இதில், கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை கமிஷ்னர் பிரசன்னாராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X