ஒமர் அப்துல்லா வழக்கு நீதிபதி திடீர் விலகல்

Added : பிப் 13, 2020
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து, நீதிபதி எம்.எம்.சந்தனகவுடர் திடீரென விலகினார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.இதில், பரூக் அப்துல்லா மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தியும், சமீபத்தில் இந்த சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.இந்த சட்டத்தில் ஒமர் அப்துல்லா கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவருடைய சகோதரி சாரா அப்துல்லா பைலட், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள், என்.வி.ரமணா, சந்தனகவுடர், சஞ்சிவ் கன்னா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காரணம் ஏதும் கூறாமல், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து வெளியேறுவதாக, நீதிபதி சந்தனகவுடர் கூறினார்.சாரா அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரினார். அதையடுத்து, வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X