பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கல்வி அலுவலர் இல்லை ; தேர்வு நேரத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை

Added : பிப் 13, 2020
Advertisement

கோவை : பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், விரைவில் புதிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் நிரப்ப வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக காரணங்களுக்காக, கோவை நகர்ப்புற கல்வி மாவட்ட அலுவலர் கீதா, பதவி உயர்வு அடிப்படையில், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு, நடக்கவுள்ளதால் வரும், 17ம் தேதி, புதிய பணியிடத்திற்கு செல்ல, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்.,9ம் தேதியுடன் நிறைவடைகின்றன.பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், பணிச்சுமை அதிகரிக்கும்.பொதுத்தேர்வுக்கு கண்காணிப்பாளர்கள் நியமித்தல், வினாத்தாள் கட்டு பாதுகாப்பு மையம், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட, பொதுத்தேர்வு சார்ந்த பணிகள் சுமுகமாக நடக்க, விரைவில் புதிய அலுவலர் நியமிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுத்தேர்வு சமயத்தில், ஏழு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடத்தில், பொறுப்பு அலுவலர்கள் நியமித்தால், தேர்வு நடைமுறைகள் பின்பற்றுவதில் குழப்பங்கள் ஏற்படும். எனவே, விரைவில் மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X