பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு அலுவலகத்தில் உரம் தயாரிப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்த மாநகராட்சி புதிய முயற்சி

Added : பிப் 13, 2020
Advertisement
 வார்டு அலுவலகத்தில் உரம் தயாரிப்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்த மாநகராட்சி புதிய முயற்சி

திருவான்மியூர்:துர்நாற்றம் வீசுவதால், சில மயானத்தில் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்கள் அச்சத்தை போக்க, 182வது வார்டு அலுவலகத்தில், மாநகராட்சி உரக்கூடம் அமைத்துள்ளது.

பெரும்பாலான, இயற்கை உரம் தயாரிப்பு கூடங்கள், மயானங்களில் அமைக்கப்படுகிறது. சில மயானங்களில் உரக்கூடம் அமைக்க, சுற்றி வசிப்போர், கொசு தொல்லை, துர்நாற்றம் வீசுவதாக கூறி, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், இத்திட்டத்தை விரிவுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறுகிறது.

இந்நிலையில், துர்நாற்றம் வீசுவதாக, பொதுமக்களிடம் இருந்து வரும் அச்சத்தை போக்க, மாநகராட்சி அலுவலக வளாகத்தில், இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க, முடிவு செய்யப்பட்டது.இதன்படி, அடையாறு மண்டலம், 182வது வார்டு அலுவலக வளாகத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில், 'நானோ' என்ற சிறிய வகை உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

அதில், 5 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட இரண்டு தொட்டிகள் அமைத்து, சுற்றி வலை கட்டப்பட்டுள்ளது. அருகில், மறுசுழற்சி குப்பை சேகரிக்க, தனித்தனி பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது.மேலும், மறுசுழற்சி பயனாக, டயர், குடிநீர் பாட்டில், சேதமடைந்த கேன் போன்றவற்றில், செடிகள் நடப்பட்டுள்ளன. வார்டு அலுவலகத்தை சுற்றி வசிப்போர், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தனித்தனியாக பிரித்து வழங்குகின்றனர்.

இதர பகுதியில், துப்புரவு ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர்.இயற்கை உரம் தயாரிப்பு கூடத்தால், எவ்வித சுகாதார பாதிப்பும் ஏற்படுவதில்லை. பல இடங்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்படுகிறது. மக்கள் அச்சத்தை போக்க, 'நானோ' திட்டத்தை துவக்கி உள்ளோம். பலர் வந்து செல்லும் பகுதியான இங்கு அமைத்துள்ளோம். உரக்கூடம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கும் மக்களை அழைத்து வந்து, எந்த பாதிப்பும் ஏற்படாது என, புரிய வைக்க உள்ளோம்

.மாநகராட்சி அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X