போலீசுடன் தகராறு செய்த போதை நபர்களுக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசுடன் தகராறு செய்த போதை நபர்களுக்கு சிறை

Added : பிப் 13, 2020
Share

கோவை : கோவையில் இரு வேறு சம்பவங்களில், பெண் போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட இரு வாலிபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காந்திபுரம் காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மகேந்திரன். நேற்று முன்தினம் பணியில் இருந்த மகேந்திரன், வழக்கு ஒன்று குறித்து, விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து எஸ்.ஐ., மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, தகராறில் ஈடுபட்டுள்ளார்.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அந்தமான் தீவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பெத்துகுமார், 34 என்பதும், ஒண்டிப்புதூரில் தங்கி, கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது.

அவர் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.மற்றொரு சம்பவம் கோவை கணபதி பகுதியில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் போக்குவரத்து பெண் போலீஸ் சுதாவிடம், குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரத்தினபுரியை சேர்ந்த ஜோதி மாணிக்கம் மகன் விஜயராஜ், 27 என்பவரை, சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X