பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா அமைக்கும் பணி துவக்கம்

Added : பிப் 13, 2020
Advertisement

செம்பாக்கம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஓராண்டாக கிடப்பில் கிடந்த பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட, திருமலை நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்க, திருமலை நகர், ஐந்தாவது தெருவில், 11 கிரவுண்டு நிலம், செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற அமைப்பு திட்ட இயக்குனரால் ஒதுக்கப்பட்டது.இந்நிலையில், அந்த இடத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொது கிணறு, ரேஷன் கடை, உடற்பயிற்சி கூடம், நுாலகம், சமுதாய கூடம் ஆகியவை கட்டப்பட்டன.

மீதமுள்ள நிலத்தில், சிறுவர் பூங்கா அமைக்க, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தாம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., நிதியில், 2019 பிப்ரவரியில், பூங்கா அமைக்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது.உடற்பயிற்சி கூடத்தின் புனரமைப்பு பணிகளுக்காகவும், 18.50 லட்சம் ரூபாய் என, 38.50 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டது. நிதி ஒதுக்கி ஓராண்டை நெருங்கிய நிலையில், பணிகள் துவங்காமல் இருந்தன.

இது குறித்து, நம் நாளிதழில், தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் சமீபத்தில், பூங்கா அமைக்கும் பணிகளை துவக்கினர்.பணிகள் மந்தகதியில் நடப்பதால், அதை வேகப்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம், உடற்பயிற்சி கூடத்திற்கான புனரமைப்பு பணிகள் துவங்கப்படாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X