பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

Added : பிப் 13, 2020
Advertisement
 வாகனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லுாரி மாணவர்கள், மதுக்கரை வட்டார சுகாதார துறை இணைந்து, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.வாளையார் சோதனை சாவடி அருகே நடந்த விழிப்புணர்வு பிரசார முகாமில், டாக்டர் அழகு ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், செந்தில்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்தும், இதனால் உண்டாகும் காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் குறித்தும் விளக்கினர்.நோய் வராமல் தவிர்க்க தினமும், 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ அறிவுறுத்தினர்.

கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அவ்வழியே வந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.கே.எஸ்.ஜி., கல்லுாரியில்சர்வதேச கருத்தரங்குகே.எஸ்.ஜி., கல்லுாரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில், 6வது சர்வதேச கருத்தரங்கு நடந்தது. 'உயிர் விஞ்ஞானம் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கி' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடந்தது. இதில், உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் அறிவியலின் புதுமை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

கோவையிலுள்ள, 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தாளாளர் கீதா, செயலாளர் பவித்ரா, முதல்வர் குணாளன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.டெக்னோ மென்சர்-20கல்லுாரியில் கருத்தரங்குகோவை, மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தகவல் தொழில்நுட்ப துறையின் சார்பில், 'டெக்னோ மென்சர்-20' என்ற தலைப்பில், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டன.

பெங்களூரு, ஐ.பி.எம்., நிறுவன கட்டட தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் திட்ட தலைவர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தார். 33 கல்லுாரிகளில் இருந்து வந்திருந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி தலைவர் ரமேஷ் பாப்னா, செயலாளர் பாரத்குமார் ஜெகமணி, முதல்வர் சுப்பிரமணி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ரத்தினம் கல்லுாரியில்தேசிய கருத்தரங்குரத்தினம் கல்லுாரியில் மாணவர்களின் படைப்பாற்றல் சிந்தனையை வெளிப்படுத்தும் நோக்கில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.கோவை, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை இணைந்து, தேசிய அளவிலான இக்கருத்தரங்கை நடத்தின. மாணவர்களின் கருத்துக்கள், அவர்களின் படைப்பாற்றல் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில், கருத்தரங்கு மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.

150 கல்லுாரிகளை சேர்ந்த, 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பி.எஸ்.ஜி., கல்வி குழும முன்னாள் பேராசிரியர் வேதபுரி, ரத்தினம் கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர் முரளிதரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X