சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது அரசு பஸ் மோதல்; மாணவர் பலி

Added : பிப் 13, 2020
Advertisement

கோவை, : அரசு பஸ், மாணவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் மாணவர் ஒருவர் பலியானார்.

தர்மபுரி இலக்கியம்பட்டி, விருப்பாச்சியை சேர்ந்த செல்வம் மகன் பிரசன்னகுமார், 18. பீளமேடு பகுதியில் தங்கி, தனியார் பள்ளியின் பிளஸ்2 மாணவர். கடந்த 9ம் தேதி, நண்பர் விக்னேஷ், 18 உடன், காந்திபுரம் பகுதிக்கு, தனது ஸ்கூட்டியில் சென்றார்.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த காந்திபுரம் - இருகூர் செல்லும் டவுன் பஸ், திடீரென பஸ் ஸ்டாண்டுக்குள் திரும்பியது. நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம், பஸ்சின் முன் சக்கரத்தில் மோதியது.

பஸ் சக்கரத்தில் சிக்கிய இருவரும், சில அடி துாரம் இழுத்து செல்லப்பட்டனர். பயணிகள் சத்தமிட்டதால், உடனடியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர், சக பயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர்.போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலத்த காயமடைந்த பிரசன்னகுமாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். சிறு காயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்கு பின், வீடு திரும்பினார். போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.விபத்து குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X