'தூக்கு தண்டனை குற்றவாளிக்கு சட்ட உதவி பெற உரிமை'

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: 'துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, தன் கடைசி மூச்சு வரை, சட்ட உதவி பெற அனைத்து உரிமையும் உள்ளது' என, டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார், பவன் குப்தா,
nirbhaya_case,delhi_gang_rape,SupremeCourt,SC,nirbhaya,நிர்பயா,சுப்ரீம்கோர்ட்,உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, தன் கடைசி மூச்சு வரை, சட்ட உதவி பெற அனைத்து உரிமையும் உள்ளது' என, டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, 'நிர்பயா' 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார், பவன் குப்தா, வினய், அக் ஷய் ஆகியோருக்கு, துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல் காரணமாக தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. மறுசீராய்வு மனு, கருணை மனு என, குற்றவாளிகள், மாறி மாறி மனு தாக்கல் செய்வதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும், ஒரே நேரத்தில் துாக்கு தண்டனையை நிறைவேற்றாமல், தனித் தனியாக நிறைவேற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நான்கு குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கும், இடைக்கால தடை விதித்துள்ளது.

குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற கோரி, நிர்பயாவின் பெற்றோர் மற்றும் டில்லி அரசு சார்பில் நேற்று முன்தினம், டில்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திரா ரானா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'என் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞரை நீக்கிவிட்டேன். புதிய வழக்கறிஞரை நியமிக்க, கால அவகாசம் தேவை' என, கூறப்பட்டிருந்தது. வழக்கறிஞரை நியமிக்க, பவன் குமார் கால தாமதம் செய்வதற்கு, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு, தன் கடைசி மூச்சு உள்ள வரை, சட்ட உதவி பெற உரிமை உள்ளது. பவன் தந்தையிடம், வழக்கறிஞர் பட்டியல் ஒன்றை, டில்லி சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார். விசாரணை இன்றும் தொடர்கிறது.


என்னுடைய உரிமை என்ன ஆனது?


''சட்ட உதவி பெற, குற்றவாளிக்கு உரிமை உள்ளது என்றால், என்னுடைய உரிமை என்ன ஆனது,'' என, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கேட்டார். குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில், வேண்டுமென்றே கால தாமதம் செய்ப்படுவதாக கூறி, டில்லி விசாரணை நீதிமன்றத்துக்கு வெளியே, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


அப்போது, அவர் கூறியதாவது: துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப்படுத்த, குற்றவாளிகள் பல வகையிலும் முயற்சிக்கின்றனர். குற்றவாளிக்கு சட்ட உதவி பெற உரிமை உள்ளது என, நீதிபதி கூறுகிறார். அப்போது, என் உரிமை என்ன ஆனது... இது பற்றி யாருக்கும் கவலையில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் நீதி கேட்டு போராடி வருகிறேன்.

கடந்த முறை, உயர் நீதிமன்றம் ஒரு வார அவகாசம் கொடுத்துள்ளது எனக் கூறி, தண்டனையை நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறபிக்கப்படவில்லை. இப்போது, வழக்கறிஞர் இல்லை என, குற்றவாளிகளில் ஒருவர் கூறுகிறார். மகளை இழந்த எனக்கு, இதுதான் நீதியா. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.


நிர்பயா உறவினரிடம் டாக்டர் கிண்டல்:


நிர்பயாவின் பெற்றோர், உத்தர பிரதேச மாநிலம் பலியா பகுதியைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, நிர்பயா நினைவாக, பலியாவில் அரசு மருத்துவமனை ஒன்றை, மாநில அரசு கட்டியுள்ளது. இந்த மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை என கூறி, பலியா கிராம மக்கள், மருத்துவமனைக்கு வெளியே, சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்பயாவின் உறவினர் ஒருவரும் பங்கேற்றிருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மருத்துவமனையின் தலைமை டாக்டர் பேசுகையில், 'மருத்துவமனையை உருவாக்குவது, டாக்டரின் வேலையில்லை என, தெரிவித்தார். இதற்கு நிர்பயாவின் உறவினர் உட்பட சிலர், 'நிர்பயா பெயரில், இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது தான், அவரது கனவு, இதை நனவாக்க வேண்டாமா' என, கேட்டனர்.

இதற்கு டாக்டர், ' நிர்பயா யார்; பலியாவில் பிறந்து, மருத்துவம் படித்தவர் என்றால், அவரை எதற்காக டில்லி அனுப்பினீர்கள்... டாக்டர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்க, உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை' என, கூறியுள்ளார். இது, கிராம மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்களிடம், டாக்டர் பேசிய பேச்சுகள் அடங்கிய 'வீடியோ' பதிவு வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
13-பிப்-202020:07:09 IST Report Abuse
M.RAGHU RAMAN எப்படியும் இன்னும் ஒருமாதத்திற்குள் நால்வரையும் தூக்கில் போட்டுவிடுவார்கள்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
13-பிப்-202019:25:19 IST Report Abuse
spr இந்த வழக்கில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பயங்கர சக்தி பின்னாலிருந்து இயக்குகிறது இல்லையேல் நிதியாதாரம் இல்லாத சாமான்யர்களான அவர்களுக்கு சட்ட அறிஞர்கள் இலவசமாக இப்படித் தொடர்ந்து வாதாட யாரோ பணம் தருகிறார்களோ? இலவசம் இல்லையென்றாலும் யாரோ அவர்களுக்கு நீதிபதிகளும் புதுப்புது ஜால்ஜாப்புக்களை தீர்ப்பாக சொல்ல மாட்டார்கள் அரசு இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
13-பிப்-202017:58:36 IST Report Abuse
Subramanian Arunachalam தூக்கு தண்டனை குற்ற வாளிகளுக்கு சட்ட உதவி பெற உரிமை உண்டு என்பதை தெளிவாக்கிய நீதிபதிக்கு மிக்க நன்றி . அவர்களால் கொலை செய்யப்பட்ட பெண்மணிக்கும் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க எந்த உரிமையும் கிடையாது என்பதையும் நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X