தமிழ்நாடு

கதவை திற! கல்லூரி மாணவர்கள் வரட்டும்...மூடிய பள்ளி விடுதிகளில் மாற்றம்!

Added : பிப் 13, 2020
Advertisement
 கதவை திற! கல்லூரி மாணவர்கள் வரட்டும்...மூடிய பள்ளி விடுதிகளில் மாற்றம்!

கோவை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளி விடுதிகளை, கல்லுாரி விடுதிகளாக மாற்ற, அரசுக்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறையின் கீழ், 33 பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளும், 6 கல்லுாரி மாணவர்களுக்குமான விடுதிகளும், செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளில், 50 சதவீத விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குனியமுத்துார், காரமடை பகுதிகளில் உள்ள விடுதிகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. வால்பாறை, கல்லாறு பகுதியில் செயல்படும் விடுதியில், ஒரு மாணவருக்காக ஒரு தலைமையாசிரியர், சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒரு சில விடுதிகளில் மாணவர்களே இல்லாமல், இருப்பது போல் கணக்கு காண்பித்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளில், ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் கீழ், பூட்டிக்கிடக்கும் கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை, கணக்கிடப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:குனியமுத்துார் ஆண்கள் விடுதியை, முதுநிலை கல்லுாரி மாணவிகளுக்கான விடுதியாகவும், காரமடை ஆண்கள் விடுதியை, இளநிலை கல்லுாரி மாணவிகளுக்கான விடுதியாகவும், ஒண்டிப்புதுார் கல்லுாரி மாணவிகளுக்கான விடுதியை விரிவுபடுத்தவும், அனுமதி கேட்டு அரசுக்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து பகுதிகளிலும், பள்ளிகள் அதிகமாக இருப்பதால், விடுதிகளில் தங்கிக் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது;

அதே சமயம், விடுதியில் இடம் கிடைக்காமல் பல கல்லுாரி மாணவ, மாணவிகள் உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ளது. இதனால், முறையான ஆய்வுக்கு பின் கல்லுாரி மாணவர், மாணவிகளுக்கான விடுதிகள் அதிகரிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். குனியமுத்துார், காரமடை பகுதிகளில் உள்ள விடுதிகள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. வால்பாறை, கல்லாறு பகுதியில் செயல்படும் விடுதியில், ஒரு மாணவருக்காக ஒரு தலைமையாசிரியர், சமையலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு சில விடுதிகளில் மாணவர்களே இல்லாமல், இருப்பது போல் கணக்கு காண்பித்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளில், ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X